ஜாதகத்தில் செவ்வாய், சனி சேர்க்கையால் ஏற்படும் பாதிப்புகள்

ஜாதகத்தில் செவ்வாய், சனி சேர்க்கையால் ஏற்படும் பாதிப்புகள்

லக்கினத்தில் செவ்வாய், சனி சேர்ந்திருந்தால் உடல்நலம் பாதிக்கப்படலாம். தேவை இல்லாமல் குழப்பம், மன உளைச்சல் வரலாம்.

லக்கினத்திற்கு 2-ல் செவ்வாய்-சனி சேர்க்கை குடும்பத்தில் கணவன் மனைவிக்குள்சண்டையை மூட்டுகிறது. தேவை இல்லா கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளது. சிலருக்கு கண்ணில் பிரச்சினை உண்டாக்குகிறது.

லக்கினத்திற்கு 3-ல் சகோதர பாவம். இங்கே செவ்வாய்-சனி சேர்க்கை சகோதரபாவத்தை பாதகம் செய்கிறது. இதனால் சகோதரர்களிடையே ஒற்றுமையை குறைக்கிறது. உடல்நலனில்தொண்டை பகுதியை பாதிக்கிறது.

லக்கினத்திற்கு 4-ல் செவ்வாய்-சனி இருந்தால் தடைப்பட்ட கல்வி ஏற்படும். தாயாருக்கு உடல்நலம் பாதிக்கும். வாகனம் அடிக்கடி பழுது ஏற்படும். வாகனங்களில் செல்லும் போது கவனமும் நிதானமும் தேவை.

லக்கினத்திற்கு 5-ல் செவ்வாய்-சனி இருந்தால் பிள்ளைகளுக்கு உடல்நலம் மற்றும் படிப்பை பாதிக்கச் செய்கிறது. சிலருக்கு பூர்வீக சொத்து விஷயத்தில் சிக்கல் ஏற்படலாம். அது கோர்ட்டு வரை இழுத்துசெல்லக் கூடும். இதய பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

லக்கினத்திற்கு 6-ல் செவ்வாய்-சனி இருந்தால் தேவை இல்லாமல் கடன் பெருகும். விரோதங்கள் தொடரும் சிலர் அறுவைசிகிச்சை செய்ய நேரிடலாம்.

லக்கினத்திற்கு 7-ல் செவ்வாய்-சனி சேர்க்கை, திருமண தடை உண்டாக்கும். அப்படிதிருமணம் நடந்தாலும் ஒற்றுமை குறைய செய்கிறது. கூட்டு தொழிலில் விரோதம்வளரும். குடும்பத்தில் யாருக்காவது உடல்நலம் குறைய வாய்ப்புண்டு.

லக்கினத்திற்கு 8-ல் செவ்வாய்-சனி இருந்தால் வாழ்க்கையில்தேவை இல்லா விரக்தி அடைய வைக்கும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுத்து நீதிமன்றத்தில் நிற்க வேண்டும். முன்கோபம் தவிர்க்க வேண்டும் இல்லையெனில் துன்பமே உண்டாகும்.

லக்கினத்திற்கு 9-ல் செவ்வாய்-சனி இணைந்தால் சொத்து வாங்கும் விஷயத்தில்கவனம் தேவை. இல்லை என்றால் ஏமாற வைக்கும். அயல்நாடு சென்றால் அங்குஅவஸ்தை படவைக்கும். தந்தை மகன் உறவில் விரிசல் உண்டாக்கும்.

லக்கினத்திற்கு 10-ல் செவ்வாய்-சனி இருந்தால் தொழில்துறையில் வளர்ச்சியில் வேகம் குறையும். போட்டிக் கடுமையாக ஏற்படுத்தும். வேலையில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரி ஒத்துழைப்பு கிடைக்காது.

லக்கினத்திற்கு 11-ல் செவ்வாய்-சனி இருந்தால் உடல் நலத்தில் மிகவும் கவனமுடன் இருத்தல் வேண்டும். அயல்நாட்டு விவகாரத்தில் உஷாராக இருத்தல் நல்லது.

லக்கினத்திற்கு 12-ல் செவ்வாய்-சனி இணைந்தால் வழக்கு- வம்பு வந்த வண்ணம்இருக்கும். நிம்மதியான தூக்கம் இருக்காது.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *