சிதம்பரம் காந்தி சிலை அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

IMG 20230320 WA0385 1
சிதம்பரம் காந்தி சிலை அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

சிதம்பரம் காந்தி சிலை அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பரம் காந்தி சிலை அருகே
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை குலைக்கும் வகையில் செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் இரவியை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்று வரும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக சிதம்பரம் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார்.
சிதம்பரம் வட்டச் செயலாளர் பிச்சப்பிள்ளை, வட்டக்குழு உறுப்பினர்கள் இராமநாத்,சசிக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சி மாநிலத் தலைவர் சம்பந்தம், மாநில செயற்குழு உறுப்பினர் அறவாழி, மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பட்டுசாமி, கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் இராமச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்,தமிழரசன்.சின்னத்துரை, மாவட்ட தொழிற்சங்க தலைவர் சுந்தர் ராஜா, மாவட்ட கட்சி துணை செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட மகளிர் சங்க ஒருங்கிணைப்பாளர் செல்வி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.

Spread the love
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial